எச்சில் ஊறும் சுவையில் மட்டன் கீமா சாதம்.., எப்படி செய்வது?
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இந்த சுவையான மட்டன் கீமா சாதத்தை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் மட்டன் கீமா சாதம் எப்படி செய்வது என்று பாரக்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- சோம்பு- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு- 4 பல்
- பச்சைமிளகாய்- 1
- வெங்காய- 2
- காய்ந்தமிளகாய்- 5
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
- மல்லி தூள்- ½ ஸ்பூன்
- கரம் மசாலா- ½ ஸ்பூன்
- மட்டன் கீமா- 1 கப்
- முட்டை- 2
- உப்பு- தேவையான அளவு
- கொத்தமல்லி- 1 கைப்பிடி சதாம்- 2 கப்
செய்முறை
முதலில் காய்ந்தமிளகாயை சுடுதண்ணீரில் ஊறவைத்து நன்கு பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சோம்பு, நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து இதில் மட்டன் கீமா சேர்த்து 10 நிமிடம் வதக்கிக்கொள்ளவும்.
இதற்கடுத்து இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேகவைத்துக்கொள்ளவும்.
பின்னர் இதில் முட்டை சேர்த்து கலந்து சாதம் மற்றும் கொத்தமல்லி தூவி கலந்து இறக்கினால் சுவையான மட்டன் கீமா சாதம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |