சூப்பரான மட்டன் குருமா...! இனி இட்லி தோசைக்கும் சாப்பிடலாம்
பொதுவாகவே அனைவரும் இட்லி, தோசை, சப்பாத்தி, பிரியாணி போன்றவற்றிற்கு வழக்கமாக செய்யக்கூடிய ஒரு குழம்பை செய்து தான் சாப்பிடுவார்கள்.
ஆனால் அதற்கு பதிலாக மட்டன் வைத்து மட்டன் குருமா செய்யலாம். அதை எப்படி இலகுவான முறையில் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
மட்டனை ஊறவைக்க
-
மட்டன் - 1 கிலோ
- மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- உப்பு - 1 தேக்கரண்டி
மசாலா விழுது அரைக்க
- பொட்டு கடலை - 2 மேசைக்கரண்டி
- சோம்பு - 1 தேக்கரண்டி
- கசகசா - 2 தேக்கரண்டி
- முந்திரி - 6
- தேங்காய் - 1/4 கப் நறுக்கியது
- தண்ணீர்
மட்டன் குருமா செய்ய
- நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
- பிரியாணி இலை - 1
- பட்டை - 3 துண்டு
- கிராம்பு - 5
- ஏலக்காய் - 2
- அன்னாசிப்பூ - 1
- மராத்தி மொக்கு - 1
- கல்பாசி - 1 சிறிய துண்டு
- ஜாவித்ரி - 1 சிறிய துண்டு
- வெங்காயம் - 3 நறுக்கியது
- பச்சை மிளகாய் - 5 கீறியது
- இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- தக்காளி - 3 நறுக்கியது
- கல்லுப்பு - 1 தேக்கரண்டி
- தனியா தூள் - 2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை தண்ணீர் - 1 1/2 கப்
- கொத்தமல்லி இலை நறுக்கியது
- கறிவேப்பிலை
செய்முறை
1. மட்டனை ஊறவைக்க ஒரு பாத்திரத்தில் மட்டன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து தனியாக வைக்கவும்.
2. மசாலா விழுது அரைக்க ஒரு கிண்ணத்தில் பொட்டு கடலை, சோம்பு, கசகசா, முந்திரி ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். ஊறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் தேங்காயை சேர்த்து நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.
3. மட்டன் குருமா செய்ய குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, கல்பாசி, ஜாவித்ரி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.
4. அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்.
5. பின்பு தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பிறகு ஊறவைத்த மட்டனை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
6. கல்லுப்பு, தனியா தூள், கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் கலக்கவும்.
7. அடுத்து தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
8. பிறகு அரைத்த மசாலா விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
9. இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
10. சுவையான மட்டன் குருமா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |