நாவூறும் சுவையில் மொறுமொறு மட்டன் சமோசா.., எப்படி செய்வது?
சமோசாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி உண்பார்கள்.
அந்தவகையில், மொறு மொறு மட்டன் சமோசா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மைதா- 2 கப்
- மட்டன் கீமா- ½ kg
- எண்ணெய்- 3 ஸ்பூன்
- வெங்காயம்- 1
- பச்சை மிளகாய்- 2
- தக்காளி- 1
- மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
- மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
- சீரக தூள்- 1 ஸ்பூன்
- மல்லி தூள்- 1 ஸ்பூன்
- உப்பு- 1 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- கரம் மசாலா- 1 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பிணைந்து அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
பின் இவற்றை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி போல் தேய்த்து தவாவில் லேசாக சுட்டு எடுத்து செவ்வக வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி கீமா மட்டனை சேர்த்து நன்கு வதக்கி தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதில் கொத்தமல்லி தூவி அடுப்பை அனைத்து இறக்கி, செய்து வைத்து சமோசா சீட்டில் இதனை வைத்து ஓரங்களை மடித்து தண்ணீர் தொட்டு ஒட்டவும்.
இறுதியாக வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் செய்துவைத்த சமோசாவை பொன்னிறமாக பொறித்து எடுத்தால் மட்டன் சமோசா தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |