நாவூறும் சுவையில் சத்தான இடிச்ச ஆட்டுக்கால் ரசம்.., எப்படி செய்வது?
மழைக்காலத்தில் ஏற்படும் வறட்டு இருமல், சளி போன்றவற்றை நீங்க இந்த ஆட்டுக்கால் ரசத்தை சாப்பிடலாம்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் சத்தான ஆட்டுக்கால் ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஆட்டுக்கால்- 10 துண்டு
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- வெங்காயம்- 1
- தக்காளி- 1
- கறிவேப்பிலை- 1 கொத்து
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- சின்ன வெங்காயம்- 10
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு- 3 பல்
- கொத்தமல்லி- சிறிதளவு
- பட்டை- 1 துண்டு
- கிராம்பு- 2
- ஏலக்காய்- 2
- மிளகு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- பச்சைமிளகாய்- 1
- உப்பு- தேவையான அளவு
- மிளகு தூள்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஆட்டுக்காலை நன்கு கழுவி சுத்தம் செய்து அம்மியில் லேசாக இடித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
இதற்கடுத்து இதில் ஆட்டுக்காலை சேர்த்து வதக்கவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், மிளகு, பச்சைமிளகாய் மட்டும் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் ஆட்டுக்காலில் அரைத்து பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
இறுதியாக இதில் மிளகுதூள் மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சத்தான ஆட்டுக்கால் ரசம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |