நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நெஞ்சு எலும்பு சூப்.., எப்படி செய்வது?
Mutton Soup Recipe- ஆட்டு நெஞ்செலும்பு சூப் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
இதில் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கொலாஜன் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதனை குடிப்பதனால் எலும்பு மற்றும் தசை வலிமை, சளி, இருமல் நிவாரணம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், குடல் ஆரோக்கியம், மூட்டு வலி நிவாரணம், நல்ல தூக்கம் போன்றவைக்கு உதவும்.
அந்தவகையில், உடல் ஆரோக்கியத்திற்கு நெஞ்சு எலும்பு சூப் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெஞ்சு எலும்பு கறி- 1kg
- வெங்காயம்- 2
- பச்சைமிளகாய்- 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- கொத்தமல்லி- சிறிதளவு
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- உப்பு- 2 ஸ்பூன்
- மிளகு தூள்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நெஞ்சு எலும்பு கறி சேர்த்து 2- 3 முறை நன்கு கழுவிக்கொள்ளவும்.
பின் ஒரு குக்கரில் நெஞ்சு எலும்பு கறி, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய கொத்தமல்லி, மஞ்சள் தூள், சீரகம், உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.

அடுத்து இதில் தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு அடுப்பில் வைத்து 10 முதல் 12 விசில் வைத்து எடுக்கவும்.
இறுதியாக இதில் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் மிளகு தூள் சேர்த்து இறக்கினால் சுவையான நெஞ்சு எலும்பு சூப் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |