பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் டிக்கா: கண்டிப்பா இப்படி செய்து பாருங்க
எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட்டு வெறுத்துவிட்டதா? சுவையான உணவை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், ஆட்டிறைச்சியில் செய்யப்பட்ட ஒரு மட்டன் டிக்கா எப்படி செய்து சாப்பிடலாம் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பொதுவாகவே ஏதாவது பண்டிகை என்றால் தான் ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சிகளை வீட்டிற்கு வாங்கி சமைத்து மகிழ்வோம்.
தற்போது பக்ரீத் பண்டிகை வருதால் ஆட்டிறைச்சியும் மலிவான விலையில் கிடைப்பதால், இந்த பண்டிகையை எவ்வாறு சுவையுடன் சிறப்பாக மாற்றலாம் என்று தெரியுமா?
இந்த சுவையான மட்டன் டிக்காவை சப்பாத்தி மற்றும் நான்களுடன் சாப்பிடலாம். இதை தயாரிப்பதற்கு முதலில் எலும்பில்லாத இறைச்சியை பயன்படுத்த வேண்டும்.
முதலில் தேவையான பொருட்கள் மற்றும் எவ்வாறு செய்யலாம் என்ற பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஒரு கிலோ எலும்பு இல்லாத ஆட்டிறைச்சி
- ஒரு ஸ்பூன் - தயிர்
- இஞ்சி, பூண்டு விழுது
- வெங்காயம்
- சீரகம்
- லவங்கப்பட்டை
- கருப்பு மிளகு
- கிராம்பு
- ஏலக்காய்
- மல்லி
- கொத்தமல்லி
- சோம்பு பூ
- ஒரு ஸ்பூன் - உலர்ந்த இஞ்சி தூள்
- சிவப்பு மிளகாய் தூள்
- ஒரு டீஸ்பூன் - மஞ்சள்தூள்
- அரை டீஸ்பூன்- பேக்கிங் சோடா
- இரண்டு ஸ்பூன்- பச்சைப் பட்டாணி விழுது
- ஒரு டீஸ்பூன்- சாட் மசாலா
- இரண்டு எலுமிச்சை பழச்சாறு
- தேவைப்பட்டால் ஃபுட் கலர்
- தண்ணீர்
- ஒரு டீஸ்பூன் கசூரி மேத்தி
- நெய்
செய்முறை
-
முதலில் ஆட்டிறைச்சியில் மணம் செல்லும் வரை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பின் அதில் தயிர் இஞ்சி பூண்டு விழுது, வெங்காய விழுது, உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வதக்கி ஆறு விசில் வரும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
- டிக்கா செய்வதற்கு முதலில் மசாலா தயார் செய்ய வேண்டும். முதலில், உலர்ந்த கொத்தமல்லி, சீரகம், லவங்கப்பட்டை, கருப்பு மிளகு, கிராம்பு, உலர்ந்த ஏலக்காய், கொத்தமல்லி மற்றும் அன்னாசி பூ மற்றும் ஒரு ஸ்பூன் சிவப்பு மிளகாய், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் காய்ந்த இஞ்சி தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி இந்த மசாலா கலவையை சேர்த்து, அரை ஸ்பூன் பேக்கிங் சோடா, இரண்டு ஸ்பூன் பச்சை பட்டாணி விழுது, ஒரு டீஸ்பூன் சாட் மசாலா, இரண்டு எலுமிச்சை சாறு, தேவைப்பட்டால் ஃபுட் கலர், ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
- இந்த மசாலா கலவையுடன் ஆட்டிறைச்சியை சேர்த்து ஒரு சில நிமிடங்கள் வரை, அதாவது அனைத்து மசாலாவும் ஆட்டிறைச்சிக்குள் செல்லும் வரை வதக்க வேண்டும்.
- வதக்கி எடுத்த ஆட்டிறைச்சியை கிரில் செய்து எடுத்தால், சுவையான மட்டன் டிக்கா தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |