டோனி மாதிரி எல்லாம் இல்ல... என் கேப்டன்சிப் இப்படி தான் இருக்கும்! ஓப்பனாக பேசிய சஞ்சு சாம்சன்
ஐபிஎல் தொடரில் தன்னுடைய கேப்டன்சிப் குறித்தும் ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவில் இந்தாண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடர் வரும் 9-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதில் முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் ராஜஸ்தான் அணி புதிய கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமித்தது.
இதனால் சஞ்சு சாம்சன் கேப்டன்சிப் மற்றும் டோனி கேப்டன் சிப் என இரண்டையும் ஒப்பிட்டு சில செய்திகள் வெளியாகின.
இது குறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில், டோனி ஒரு மிக சிறந்த கேப்டன். டோனி எப்போதும் டோனி தான், அவரது முடிவுகள் மற்றும் அவரது கேப்டன்சி மிக தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
என்னை அவருடன் ஒப்பிட வேண்டாம். நான் சஞ்சு சாம்சன் ஆக இருக்கவே ஆசைப்படுகிறேன்.
கேப்டனாக இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மிக சிறப்பான விதத்தில் தலைமை தாங்க போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
