என் 7 வயதில் அப்பா தற்கொலை! விஜய் ஆண்டனி பேசிய உருக்கமான வீடியோ
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இன்று காலை தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
விஜய் ஆண்டனி மகள் தற்கொலை
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இன்று காலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு முன், பாடலாசிரியர் கபிலன் மகள் தற்கொலை செய்து கொண்ட துயரமே இன்னும் மீளவில்லை. அதற்குள், மன அழுத்தம் காரணமாக விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை செய்து கொண்டார் என்று செய்தியால் திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
இதற்கிடையில், "மன அழுத்தம் காரணமாக மாணவர்களுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வருகிறது. இதனால், குழந்தைகளை பள்ளி முடித்து வந்தவுடன் டியூசன் போ, அது போ என்று சொல்லாதீர்கள்" என பேசியிருந்தார்.
7 வயதில் அப்பா தற்கொலை
இந்நிலையில், தற்கொலை தொடர்பாக விஜய் ஆண்டனி, முன்பு பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர், "எந்த காரணமாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தற்கொலை செய்து கொள்ள கூடாது.
He Lost His Dad At He Was 7 Age (Commited Suicide)
— VijayAlif ?ᗪ?️ (@VijayAlif5) September 19, 2023
Now He Lost His 16 Yrs Old Daughter ( Commited Suicide)
Why is God So Cruel To A Kind
Hearted Person ??#VijayAntony pic.twitter.com/23vieZxCxL
எனக்கு ஏழு வயது ஆகும் போது என் தந்தை தற்கொலை செய்து கொண்டார். அப்போது என் தங்கைக்கு ஐந்து வயது.
என்னுடைய அம்மா இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார். அதனால் யாரும் என்ன கஷ்டம் வந்தாலும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்" என பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |