என் அவுட் பத்தி கேட்டா... சம்பளத்தை பிடிச்சுருவாங்க! மயங்க் அகர்வால் விளக்கம்
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், தன்னுடைய அவுட் குறித்து கேட்ட கேள்விக்கு மயங்க் அகர்வால், தன்னுடைய சம்பளத்தை பிடித்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று துவங்கியது. இதில் இரண்டாம் நாளான இன்று இந்திய அணி சற்று முன் வரை 3 விக்கெட் இழப்பிற்கு 272 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இதில் துவக்க வீரரான மயங்க் அகர்வால் 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில், லுங்கி நிகிடி பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.
Mayank Agarwal LBW Wicket,
— Error in Thinking (@Errorinthinking) December 26, 2021
India vs South Africa 1st Test#Wicket#SAvIND #Mayank#Agarwal#Ngidi#Cricket pic.twitter.com/j6ayNJW1RT
முதலில் இதற்கு நடுவர் நாட் அவுட் கொடுக்க, அதன் பின் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் எல்கர் ரிவ்யூ கேட்க, இது அவுட் என்பது தெரியவந்தது. அதாவது, பந்தானது பிட்சில் பெரிய ஸ்விங் இல்லாத போது மிடில் ஸ்டம்பிலிருந்து உள்ளே வந்த பந்து கிரீசுக்குள் டீப் ஆக இருக்கும் அகர்வாலின் பேடில் பட்டது.
இதனால் மிகுந்த விரக்தியுடன் அகர்வால் வெளியேறினார்.
இது குறித்து அகர்வாலிடம் கேட்ட போது, நான் இந்த அவுட் தீர்ப்பு குறித்து கருத்து கூற விரும்பவில்லை, எனக்கு அனுமதி கிடையாது.
இல்லையெனில் நான் விதியை மீறுபவன் ஆவேன், என்னுடைய சம்பளம் முடக்கப்படும் என்று கூறியுள்ளார்.