எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி
ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக பட்டதாரி ஒருவர், இஸ்ரேலுடனான அந்த பல்கலையின் நிதி உறவுகளையும், காஸாவில் நடந்த இனப்படுகொலையில் அதன் பங்கையும் கடுமையாக சாடியுள்ளார்.
தார்மீக முதுகெலும்பு
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் பட்டதாரியான சிசிலியா கல்வர், தனது தொடக்க உரையில், பாலஸ்தீனத்தில் வெளிப்படும் கொடூரங்கள் அனைத்தும் தார்மீக முதுகெலும்பு இல்லாதவர்களால் மட்டுமே புறக்கணிக்கப்படுகின்றன என்று அறிவித்தார்.
ஒரு வருடத்திற்கும் மேலாக, பாலஸ்தீனியர்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலை நடத்தப்படுவதை நாம் பார்த்து வருகிறோம் என கல்வர் தனது உரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டார்.
பாலஸ்தீனத்தில் எத்தனை மாணவர்கள் தங்கள் படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர், தங்கள் மூதாதையர்களின் நாட்டிலேயே இருந்ததற்காக கொல்லப்பட்டனர் என்பதை அறிந்து, கனத்த இதயம் இல்லாமல் எனது சொந்த பட்டமளிப்பு விழாவை என்னால் கொண்டாட முடியாது என்றார்.
அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களைக் கையாள்வது குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான கருத்தை பதிவு செய்ததைத் தொடர்ந்து சிசிலியா கல்வர் தமது பதிலை வெளிப்படுத்தியுள்ளார்.
பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவு போராட்டங்களை அமெரிக்க எதிர்ப்பு மற்றும் யூத எதிர்ப்பு ட்ரம்ப் என்று அழைத்தார், மேலும் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கும் புலம்பெயர்ந்த மாணவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தார்.
ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம் இஸ்ரேலுடன் கொண்டுள்ள ஒப்பந்தங்களை குறிப்பிட்டு, இந்த இனப்படுகொலைக்கு நிதியளிக்க எனது கல்விக் கட்டணம் பயன்படுத்தப்படுவதை அறிந்து நான் வெட்கப்படுகிறேன் என்று சிசிலியா கல்வர் மீண்டும் கூறினார்.
இனவெறி அரசான இஸ்ரேல்
மட்டுமின்றி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மாணவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக நிர்வாகம் புறக்கணிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பல்கலைக்கழகத்தின் அனைத்து மானியங்கள் மற்றும் முதலீடுகளை வெளியிடவும், இனவெறி அரசான இஸ்ரேலில் இருந்து விலகவும் பலமுறை அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், நிர்வாகம் மறுத்துவிட்டது என்று அவர் கூறினார்.
2025 ஆம் ஆண்டு வகுப்பினர் நன்கொடைகளை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள கல்வர், பாலஸ்தீனம் விடுதலை பெறும் வரை நாம் யாரும் விடுதலை பெற மாட்டோம் என குறிப்பிட்டு தனது உரையை முடித்துக் கொண்டார்.
இதனையடுத்து கல்வர் நடத்தை விதிகளை மீறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |