என் மனைவியும் அருகில் இருந்தார்! உலகக்கோப்பை போட்டியில் பேட்டிங்கில் மிரட்டிய சூர்யகுமார் யாதவ் மகிழ்ச்சி
உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் மிரட்டிய சூர்யகுமார் யாதவ் தனது ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியா - நெதர்லாந்து இடையிலான போட்டியில் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 51 ரன்களை விளாசினார்.
போட்டிக்கு பின்னர் பேசிய அவர், கோலியுடன் சேர்ந்து பேட்டிங் ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது. நான் களத்திற்கு சென்றதும் கோலி என்னிடம், நீங்கள் எப்படி பேட்டிங் ஆடுவீர்களோ அதே பாணியில் ஆடுங்கள் என சொன்னார்.
எல்லோரும் இங்கு வந்து எங்களை ஆதரிப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என் மனைவியும் அருகில் தான் இருந்தார், அவர் அளித்ததும் ஒரு சிறந்த ஆதரவு என கூறியுள்ளார்.