சார்லஸ் டயானா திருமணத்தன்று மாயமான இந்தியச் சிறுவன்: இன்றுவரை தண்டிக்கப்படாத குற்றவாளி...
இளவரசர் சார்லஸ், டயானா திருமண நிகழ்ச்சிகளைக் கண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு இந்தியச் சிறுவன் மாயமான நிலையில், அவனது கொலைக்குக் காரணமான குற்றவாளி இன்றுவரை தண்டிக்கப்படவில்லை என்கிறார்கள் அந்தச் சிறுவனின் குடும்பத்தினர்.
மாயமான இந்தியச் சிறுவன்
1981ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 29ஆம் திகதி, இளவரசர் சார்லஸ், டயானா திருமண நிகழ்ச்சிகளைக் காணச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த விஷால் மெஹோத்ரா, அப்போது அவனுக்கு 8 வயது, மர்மமான முறையில் மாயமானான்.
ஏழு மாதங்களுக்குப் பிறகு, அவனுடைய உடலில் சில பாகங்கள் மட்டும் மேற்கு சசெக்சில் கிடைத்தன. இது நடந்து 42 ஆண்டுகள் ஆகியும், விஷாலின் கொலைக்காக யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
Photograph: handout
ஆதாரம் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காத பொலிசார்
1983ஆம் ஆண்டு, குழந்தைகளைக் கடத்திச் சென்று சீரழித்துக் கொலை செய்யும் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தன் கைப்பட ‘விஷால்’ என தலைப்பிட்டு எழுதிய ஆவணம் ஒன்று கிடைத்துள்ளது.
ஆனால், அந்த நபர் எழுதிய ஆவணம் கிடைத்தும்,நான்கு ஆண்டுகளுக்கு முன்வரை, சசெக்ஸ் பொலிசார், அந்த நபருடன் விஷால் கொலையை சம்பந்தப்படுத்தவே இல்லையாம்.
இனவெறுப்பு காரணமாக அலட்சியம்
விஷாலின் தந்தையான விஷாம்பர் மெஹோத்ரா, இது இனவெறுப்பு என்பதில் சந்தேகமேயில்லை என்று முன்பு கூறியிருந்தார். தற்போது, விஷாலின் சகோதரரான சச்சின் மெஹோத்ரா, நடப்பதை எல்லாம் பார்த்தால், இது இனவெறுப்புத்தான் என்பதை சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
அதாவது, ஒரு குறிப்பிட்ட வழக்கில் குற்றவாளி சிக்கவில்லையானால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த வழக்கை பொலிசார் மீளாய்வு செய்யவேண்டுமாம். ஆனால், 1981ஆம் ஆண்டு, ஒரே ஒரு முறை மட்டுமே விஷால் வழக்கு மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
நாங்கள் மட்டும் இந்தியர்களாக இல்லாதிருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்று கேட்கும் சச்சின், முறையாக இரண்டு ஆண்டுகளுக்கொருமுறை வழக்கை மீளாய்வு செய்திருப்பார்கள் இல்லையா பொலிசார் என கேள்வி எழுப்புகிறார்.
இந்த சம்பவம் நடந்து 42 ஆண்டுகள் ஆகிறது, எத்தனையோ வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் சசெக்ஸ் பொலிசார் எதுவும் செய்யவில்லை என்கிறார் அவர்.
சசெக்ஸ் பொலிசாரோ, தாங்கள்: இன்னமும் வழக்கு விசாரணை நடந்துகொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள்.
சார்லஸ் டயானா திருமணத்தன்று காணாமல் போன சிறுவன், சார்லசும் டயானாவும் பிரிந்து, டயானா மறைந்து, சார்லஸ் மீண்டும் திருமணம் செய்து, சார்லசுடைய பிள்ளைகளுக்கும் திருமணமாகி, சார்லஸ் தாத்தா ஆகியும் இன்னமும் பொலிசார் வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கிறார்களாம்!