கனடாவில் கரையொதுங்கிய ராணுவ பீப்பாயால் பரபரப்பு

Canada
By Balamanuvelan Nov 07, 2026 07:56 AM GMT
Report

A mysterious U.S. army barrel washed ashore in Quebec: கனடாவின் கியூபெக்கில், அமெரிக்க ராணுவ பீப்பாய் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

கனடாவிலுள்ள சிறிய தீவொன்றில், அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான பீப்பாய் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

அது குறித்து தகவல் கிடைத்ததும், கியூபெக் மாகாணமே பரபரப்படைந்துள்ளது!

அமெரிக்க ராணுவ பீப்பாயால் பரபரப்பு

சென்ற மாதம் 27ஆம் திகதி, கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள Île aux Canards என்னும் சிறு தீவில் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான பீப்பாய் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 

கனடாவில் கரையொதுங்கிய ராணுவ பீப்பாயால் பரபரப்பு | Mysterious Us Army Barrel Washed Ashore In Quebec

உடனடியாக, வெடிகுண்டு நிபுணர்கள், அபாயகரமான ரசாயனங்கள் முதலான விடயங்களைக் கையாளும் hazmat குழுவினர் மற்றும் ஹெலிகொப்டர்களுடன் பொலிசார் அந்த தீவுக்கு விரைந்துள்ளனர்.

அந்த பீப்பாயை கவனமாகக் கையாண்ட நிபுணர்கள், அதிலிருந்து மாதிரிகளை சேகரித்து ஆல்பர்ட்டாவிலுள்ள Suffield நகரில் அமைந்துள்ள ராணுவ தளத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.  

2027ஆம் ஆண்டுக்கான கனடாவின் புலம்பெயர்தல் திட்டம்: பட்ஜெட்டில் வெளியான தகவல்

2027ஆம் ஆண்டுக்கான கனடாவின் புலம்பெயர்தல் திட்டம்: பட்ஜெட்டில் வெளியான தகவல்

பரபரப்புக்குக் காரணம் என்ன?

இப்படி ஒரு பீப்பாய் பெரும் பரபரப்பை உருவாக்க காரணம் உள்ளது. அதாவது, அந்த பீப்பாயில் ’அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது’ என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அந்த பீப்பாய் 1942ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கனடாவில் கரையொதுங்கிய ராணுவ பீப்பாயால் பரபரப்பு | Mysterious Us Army Barrel Washed Ashore In Quebec

இரண்டு ஆண்டுகளுக்கு முன், Christine மற்றும் Sébastien LeBlanc என்னும் இருவர், இதேபோன்றதொரு பீப்பாயை ஒரு தீவில் கண்டுபிடித்துள்ளார்கள்.  

கனடாவில் கரையொதுங்கிய ராணுவ பீப்பாயால் பரபரப்பு | Mysterious Us Army Barrel Washed Ashore In Quebec

மார்ச் மாதம் வரை அதைப் பற்றி எந்தக் கவலையும்கொள்ளவில்லை. ஆனால், மார்ச் மாதம் Project N என்னும் ஒரு புத்தகம் வெளியாகியுள்ளது.

அதிரவைத்த தகவல்கள்

புலனாய்வுப் பத்திரிகையாளர்களான Vincent Frigon மற்றும் Yves Bernard என்னும் இருவர் எழுதியுள்ள அந்த புத்தகத்தில், அதிரவைக்கும் சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதாவது, இரண்டாம் உலகப்போரின்போது, ஜேர்மனி மீது வீசுவதற்காக, உயிரி ஆயுதம் ஒன்றை கனேடிய ராணுவம் தயாரித்ததாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Grosse Île என்னும் தீவில் அமைக்கப்பட்ட ஒரு ஆய்வகத்தில், ஆந்தராக்ஸ் என்னும் பாக்டீரியாவின் ஸ்போர்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

அந்த ஸ்போர்களை குண்டுகளில் நிரப்பி ஜேர்மன் நகரங்கள் மீது வீசுவதுதான் திட்டம்.

அந்த ஆய்வகம், 1943ஆம் ஆண்டு முதல் 1944ஆம் ஆண்டுவரை இயங்கிவந்துள்ளது.

ஆனால், போர் முடியும் வரை அந்த குண்டுகள் தயாராகவில்லையாம். அவை குறித்து இந்த பத்திரிகையாளர்கள் அந்த விடயத்துடன் தொடர்புடைய Thomas Stovell என்னும் ராணுவ வீரரிடம் விசாரிக்க, அவர் அந்த ஆந்தராக்ஸ் ஸ்போர்களை, ஃபார்மால்டிஹைட் என்னும் கிருமிகளை கொல்லும் ரசாயனத்துடன் கலந்து, பின் அதை செயிண்ட் லாரன்ஸ் நதியில் கொட்டிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆக, அந்த பீப்பாய் இரண்டாம் உலகப்போர்க்காலத்தைச் சேர்ந்தது என்பதால், அதில் ஆந்தராக்ஸ் ஸ்போர்கள் இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டதாலேயேதான் கியூபெக் அதிகாரிகள் பரபரப்படைந்துள்ளார்கள்.

இந்நிலையில், அந்த பீப்பாயில் ஆந்தராக்ஸ் கிருமிகள் எதுவும் இல்லை என கியூபெக் பொலிசார் தற்போது தெரிவித்துள்ளார்கள்.

அந்த பீப்பாயை ஆய்வுக்குட்படுத்தியதில், அதற்குள் ஒரு திரவம் இருந்ததாக தெரிவித்துள்ள கியூபெக் பொலிஸ் செய்தித்தொடர்பாளரான Audrey-Anne Bilodeau என்பவர், அதனால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அந்த பீப்பாய் இரண்டாம் உலகப் போர்க்காலத்தைச் சேர்ந்தது என்பதாலும், அதன் பின்னால் ஒரு கதை உள்ளது என்பதாலுமே தாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றும், ஆகவேதான் அது ஆய்வுக்குட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், அது என்ன திரவம் என்றோ, அது எங்கிருந்து வந்தது என்றோ பொலிசார் தெரிவிக்கவில்லை.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US