மன்னர் முடிசூட்டு விழாவிற்கு தாமதமாக வந்த இளவரசி கேட்-வில்லியம்: வெளியான மர்மம்
பிரித்தானியாவில் நடைபெற்ற மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு, இளவரசி கேட் மற்றும் வில்லியம் தாமதமாக வந்ததற்கான மர்மம் விளக்கப்பட்டுள்ளது.
மன்னர் முடிசூட்டு விழா
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமலா ஆகியோருக்கு முடிசூடப்பட்டது.
வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இந்த விழாவில், இளவரசி கேட் மற்றும் வில்லியம்(kate and william) ஆகியோர் ஏன் இன்னும் வரவில்லை என மக்கள் தங்களுக்குள் பேசி கொண்டனர்.
@dailymirror
பக்கிங்ஹாம் அரண்மனையில் வகுக்கப்பட்ட உத்தரவின் படி, மன்னர் சார்லஸ் மற்றும் ராணி வருவதற்கு முன்னரே, கேட் தம்பதியினர் வந்து இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும்.
@gettyimages
ஆனால் திட்டமிட்டபடி அவர்கள் சரியான நேரத்திற்கு வரவில்லை. இளவரசி கேட் குடும்பத்தார் தாமதமாக வந்து சேர்ந்தனர்.
வெளியான மர்மம்
இந்நிலையில் ராயல் வாழ்க்கையை பற்றி ஆராயும் வரலாற்றாசிரியர் ஓமிட் ஸ்கோபி, தம்பதியினரின் குழந்தைகளால் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.
அரச குடும்பத்தினரான கேட் மற்றும் வில்லியமின் நேர தவறுதலை பிரித்தானியர்கள் கண்டறிந்ததோடு , தாமதத்திற்கான காரணத்தை பற்றி சமூக வலைதளங்களில் விவாதிக்க துவங்கியுள்ளனர்.
@afp
சமூக வலைதளங்களில் இது பற்றி கருத்து தெரிவித்த ஒருவர் ‘இளவரசர் வில்லியம், கேட் மற்றும் அவர்களது 2 குழந்தைகள், 5 நிமிடங்கள் முன்னதாகவே வந்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் ஒரு நிமிடம் தாமதமாக வந்துள்ளனர்.
சர்ச்சையான நிகழ்வு
இதனால் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் உள்ளே நுழையும் வரை, சார்லஸ் மன்னரால் வண்டியை விட்டு இறங்க முடியவில்லை.’ என கூறியுள்ளார்.
@afp
மற்றொருவர் ‘வில்லியம் தாமதமாக வந்ததால், சார்லஸ் மன்னர் சற்று இறுகிய முகத்தோடு காணப்பட்டார்’ என பதிவிட்டுள்ளார்.
’இவ்வளவு அருமையாக திட்டமிட்டும், வில்லியம் மற்றும் கேட் தாமதமாக வந்திருக்கிறார்கள்' என கேலி செய்யும் வகையில் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.