நான் உயிருடன்தான் இருக்கிறேன்... இறந்துபோன கணவரை இந்திய உணவகத்தில் கண்ட பெண் விவகாரத்தில் அதிரடி திருப்பம்
இறந்துபோன தன் கணவரை இந்திய உணவகம் ஒன்றில் தான் கண்டதாக பிரித்தானியப் பெண் ஒருவர் கூறிய விடயம் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது நினைவிருக்கலாம்.
இறந்துபோன கணவரை இந்திய உணவகத்தில் கண்டதாக கூறிய பெண்
9 ஆண்டுகளுக்குமுன் இறந்துபோன தனது கணவர் ஹாரியை, Westbourne என்ற இடத்தில் அமைந்துள்ள, Spice Cottage என்னும் இந்திய உணவகத்தின் விளம்பரப்படத்தில் தான் கண்டதாகக் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார் லூசி வாட்சன் என்ற பிரித்தானியப் பெண்.
பின்னர், அது இப்போது படமாக்கப்பட்ட விளம்பரப்படம் அல்ல, அது 9 ஆண்டுகளுக்கு முன் படமாக்கப்பட்டிருக்கலாம் என்றும், உணவக உரிமையாளர்கள் பழைய விளம்பரப்படத்தை புதிது எனக் காட்டி மக்களை நம்பவைப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
Image: @Spice Cottage/ Facebook
நான் உயிருடன்தான் இருக்கிறேன்
இந்நிலையில், அந்த விடயத்தில் ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த விளம்பரப்படத்தில் காணப்படும் நபர், நான் உயிருடன்தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சொல்லப்போனால், அவருடன் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை Spice Cottage உணவக உரிமையாளரான Rofiqul Islam சமீபத்தில் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
Image: Spice Cottage
ஆம், லூசி விளம்பரப்படத்தில் பார்த்தது அவருடைய கணவரே அல்ல. அந்த நபருடைய பெயர் ஆலன் (Alan Harding, 67). அவருடைய நண்பர் ஒருவர் ஆலனிடம் இப்படி ஒரு செய்தி உலாவருகிறது, அந்த விளம்பரப்படத்தில் காணப்படும் நபரும் உங்களைப்போலவே இருக்கிறார் என்று கூற, ஆலன் அந்த விளம்பரப்படத்தைப் பார்வையிட்டுள்ளார்.
அது தானும் தன் நண்பரான Kevin Parsonsம்தான், தாங்கள் அடிக்கடி அந்த உணவகத்துக்குச் செல்வது வழக்கம் என்றும், அது சமீபத்தில் எடுக்கப்பட்ட விளம்பரப்படம்தான், நான் உயிருடன்தான் இருக்கிறேன் என்று வேடிக்கையாக கூறியுள்ளார் ஆலன்.
மொத்தத்தில், லூசி புண்ணியத்தில் உணவகத்துக்கு நல்ல விளம்பரம் கிடைத்துவிட்டது.
Image: EDDIE MITCHELL
Image: EDDIE MITCHELL