சுவிட்சர்லாந்தில் மாயமான பிரான்ஸ் நாட்டவரைத் தேடும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள்
சுவிட்சர்லாந்தில் மாயமான பிரான்ஸ் நாட்டவர் ஒருவரைத் தேடும் முயற்சியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஈடுபட்டுவருகிறார்கள்.
மாயமான பிரான்ஸ் நட்டவர்
தாமஸ் (Thomas Riotte, 31) என்பவர், விடுமுறைக் காலங்களின்போது சுவிட்சர்லாந்தில் chef ஆக பணியாற்றுவது வழக்கம்.
கடந்த 10 ஆண்டுகளாக Valais மாகாணத்திலுள்ள Haute-Nendaz என்னுமிடத்தில் அமைந்துள்ள பனிச்சறுக்கு ரிசார்ட்டில் பணி செய்வதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இம்மாதம், அதாவது, பிப்ரவரி மாதம் 5ஆம் திகதி, இரவு 9.30 மணிக்கு உணவகம் ஒன்றிற்குச் செல்லும் வழியில் தாமஸ் மாயமானார்.
3 நாட்களுக்குப் பின் தாமஸ் காணாமல் போனதாக பொலிசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.
தாமஸுக்கு என்ன ஆனது என்பது தெர்யாத நிலையில், மற்றவர்களுக்கு உதவும் குணமும், மக்களுடன் எளிதாகப் பழகும் குணமும் கொண்டவருமான தாமஸை தேடும் பணியில் உள்ளூர் பொதுமக்களும் சுற்றுலாப்பயணிகளும்கூட ஈடுபட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |