லொட்டரியில் ரூ 531 கோடி வென்ற கனேடியர்... ஓராண்டாக உரிமை கோராத மர்மம்
அட்லாண்டிக் கனேடிய வரலாற்றில் மிகப்பெரிய தொகை லொட்டரியில் பரிசாக வெல்லப்பட்ட நிலையில், கடந்த பல மாதங்களாக எவரும் உரிமை கோராதது மர்மமாக உள்ளது.
பரிசாக 64 மில்லியன் டொலர்
அட்லாண்டிக் லொட்டரியில் கடந்த ஏப்ரல் 15ம் திகதி ஒருவருக்கு 64 மில்லியன் டொலர் பரிசாக கிடைத்துள்ளது. குறித்த லொட்டரியானது New Brunswick மாகாணத்தின் குளோசெஸ்டர் மாவட்டத்தில் விற்கப்பட்டுள்ளது.
ஆனால் வெற்றி இலக்கத்தை அறிவித்தும், பல மாதங்களாக இதுவரை எவரும் உரிமை கோரவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களுக்கு இது தொடர்பில் பலமுறை தகவல் தெரியப்படுத்தியும் இதுவரை பலனில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெற்றியாளரைச் சந்தித்து அவர்களுக்கு 64 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ 531 கோடி) பரிசை வழங்குவோம் என்று நாங்கள் மிகவும் நம்புகிறோம் என நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் மாதம் வரையில்
குளோசெஸ்டர் மாவட்டத்தில் மொத்தம் 80,000 மக்கள் குடியிருக்கும் நிலையில், பாதுகாப்பு கருதி, எந்த நகரில் அல்லது எந்த கடையில் லொட்டரி வாங்கப்பட்டது என்ற தகவலை வெளியிட மறுத்துள்ளனர்.
மேலும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் கால அவகாசம் இருப்பதாகவும், அதன் பின்னர் அந்த தொகையானது உரிமை கோரப்படாத நிதியில் சேர்க்கப்படும் என்றும், அந்த தொகையை போனஸ் பரிசாகவும் அல்லது இன்னொரு லொட்டரி பரிசாகவும் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |