CSK அணிக்கு தோனி வேணாம்! அவரை எடுக்கலாம் என சொன்ன ஸ்ரீனிவாசன்.. ஆச்சரிய தகவல்
ஐபிஎல் முதன் முதலில் தொடங்கிய போது தோனிக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வேறு வீரரை எடுக்கவே அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் விரும்பினார் என தெரியவந்துள்ளது.
2008 ஆம் ஆண்டு முதன் முதலில் தொடங்கிய ஐபிஎல் ஏலத்தின் போது தோனியை எடுக்க சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் கடும் போட்டி நிலவியது.
இதில் ஆறரை கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி தோனியை பெற்றது. ஆனால், ஐ.பி.எல். ஏலம் பற்றி செய்திகள் வந்ததும், சென்னை அணியை என். ஸ்ரீனிவாசன் வாங்கிய பிறகு, அவர் மனதில் தோன்றிய முதல் வீரர் தோனி இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், ஸ்ரீனிவாசன் சென்னை அணிக்கு முதலில் எடுக்க நினைத்த வீரர், அப்போதைய அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக் தான். சேவாக், டெஸ்ட் போட்டியை கூட டி20 போட்டி போல் ஆடிய காலம்.
இதனால் சேவாக் சென்னை அணிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று சி.எஸ்.கே. உரிமையாளர் ஸ்ரீனிவாசன் நம்பினார். ஆனால், கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் தான் ஒற்றை காலில் நின்று, சென்னை அணிக்கு தோனியை எடுங்கள். தோனி தான் சென்னை அணியின் எதிர்காலத்திற்கு சிறந்தவர் என்று கூறியுள்ளார் என தெரியவந்துள்ளது.
அவர் கூறியபடியே பிற்காலத்தில் சென்னை அணியை உச்சத்திற்கு கொண்டு சென்றார் தோனி என்பது அனைவரும் அறிந்ததே!