மலையக மக்களின் தேவைகளை நிறைவேற்ற இந்திய அரசாங்கம் தயார்: இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மலையக மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து தருவதற்காக இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளதாக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமம் நாம் 200 நிகழ்வின் போது தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்த இந்திய நிதி அமைச்சர்
இம்மாதம் முதலாம் திகதியன்று கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் வந்தடைந்தார்.
இவரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவரும் இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மலையக மக்களுக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட 'நாம் 200' நிகழ்வில் பங்கேற்பதற்காகவே இலங்கை வந்தடைந்துள்ளார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பையேற்று இந்நிகழ்வில் இந்திய அரசின் பிரதிநிதியாகவே இந்திய நிதி அமைச்சர் பங்கேற்றுள்ளார்.
நாம் 200
மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை பெருமைப்படுத்தும் வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் 'நாம் 200' நிகழ்வு நேற்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திறி பால சிறிசேன என பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வின் போது உரையாற்றிய இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலையக மக்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்திய அரசாங்கம் தயார் என தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கம் தயார்
மலையக மக்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் ஆசிரியர் பயிற்சி வழங்கல் செயற்திட்டம் ஆரம்பிக்கப்படும்.
Education transforms, empowers and enhances social mobility. That's why the Government of India has given a special focus on educational support to you as part of its developmental partnership over decades. It was with this idea the Ceylon Estate Workers Education Trust (CEWET)… pic.twitter.com/CCRPBE2PtL
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) November 2, 2023
இந்திய நிதியுதவியின் கீழ் 4ஆம் கட்டமாக 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான இணைப்புப் பாலமாக மலையகத் தமிழர்கள் திகழ்வர்கள் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |