மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர்
ntk announced candidates for madurantakam and dharapuram by election: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சி
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பாளர் பட்டியலை தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளது.
தவெக அரசை வெளியிலிருந்து ஆதரித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் தாராபுரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுராந்தகத்திலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. செப்டம்பர் 15 ஆம் திகதி வேட்பாளர் பட்டியலை அறிவிக்க உள்ளது.
தற்போது நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

மதுராந்தகம் தொகுதியில் கோ.ஜானகிராமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் மு.கார்த்திகா போட்டியிடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் நாம் தமிழர் சார்பில் போட்டியிட்ட கோ.ஜானகிராமன், 4,950 வாக்குகள் பெற்றார்.
கார்த்திகா நாம் தமிழர் சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாகை பாராளுமன்ற தொகுதியிலும், 2026 சட்டமன்ற தேர்தலில் கீழ்வேளூர்(தனி) தொகுதியில் போட்டியிட்டு 8,069 வாக்குகள் பெற்றார்.
சட்டமன்ற இடைத்தேர்தல் – 2026
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) September 13, 2026
நாம் தமிழர் கட்சி
வேட்பாளர்கள் அறிவிப்பு
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர்… pic.twitter.com/WP7fa0ymW2
மேலும், புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் ச.கார்த்திக் குமாரி போட்டியிடுவார் என அறிவிக்கபட்டுள்ளது.