இன்னும் சின்னத்தை கூட முடிவு செய்யாத சீமான்! தற்போது புதிய சின்னம் கேட்டு கோரிக்கை
நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில் வேறொரு சின்னம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி சின்னம் விவகாரம்
வரும் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்தார்.
ஆனால் மனுவை விசாரித்த நீதிபதி கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது தன்னிச்சையோ அல்லது அரசியலமைப்புக்கு முரணானதோ இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
பின்பு, உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பு முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஏப்ரல் 1-ந் தேதிக்குள் நாம் தமிழர் கட்சியின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டது.
பின்னர், நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.
இந்நிலையில், தங்களுக்கு வேறு சின்னம் ஒதுக்கி தரும்படி நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
அதாவது, மைக் சின்னத்திற்கு பதிலாக படகு அல்லது பாய்மர படகு சின்னத்தை ஒதுக்கி தரும்படி நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |