டேய்.,மரியாதையா கேள்வி கேளுடா! SIR தொடர்பான கேள்விக்கு சீறிய நாம் தமிழர் சீமான்
புதுச்சேரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளரிடம் ஆவேசமாக பேசியது பரபரப்பானது.
SIRஐ கண்டித்து பேசிய சீமான்
புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் சீமான் SIRஐ கண்டித்து பேசினார். 
அவர், SIR கொண்டுவரும்போது மமதா பானர்ஜி எதிர்த்து மக்களை திரட்டி போராடுகிறார். ஆனால் SIRஐ தமிழ்நாட்டில் செயல்படுத்தும் கட்சி, ஆட்சி யாருடையது?
BLO அதிகாரியை நியமித்தது யார்? அங்கன்வாடி, சத்துணவில் வேலை செய்பவர்களையும், ஹெல்த் லேபர்களையும் பூத் அதிகாரிகளாக நியமித்து கணக்கெடுக்க அனுப்பியது யார்? திமுக தானே? என்று கேட்டார்.
உடனே குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், "தேர்தல் ஆணையம் சொல்லும்போது செய்துதானே ஆக வேண்டும்" என்றார்.
அதற்கு ஆவேசப்பட்ட சீமான், உனக்கு என்ன தம்பி பிரச்சனை? தேர்தல் ஆணையம் அரசை நடத்துதா? அரசு தேர்தல் ஆணையத்தை நடத்துதா? என்று சீறினார்.
மேலும், மரியாதையாக கேள்வி கேளுடா; கேள்வி கேட்க கத்துக்கிட்டு வாடா என்று கோபமாக பேச அங்கு பரபரப்பானது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |