5 ரூபாய் Frooti! ரூ.300 கோடி நிறுவனத்தை ரூ.8500 கோடியாக மாற்றிய நதியா செளகான்: வெற்றிக்கதை
17 வயதில் தன்னுடைய குடும்ப தொழிலில் களமிறங்கி நிறுவனத்தின் மதிப்பை ரூ.8,500 கோடி நிறுவனமாக மாற்றிய நதியா சவுகான் வெற்றிக் கதை இதோ!
17 வயதில் தொழில்முனைவோரான நதியா சவுகான்
டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான டீன் ஏஜ் சிறுவர்கள் கவன சிதறல்களால் மூழ்கி கிடக்கும் நிலையில், நதியா சவுகான்(Nadia Chauhan) தன்னுடைய 17 வது வயதில் குடும்ப தொழிலில் இணைந்து நிறுவனத்தின் மதிப்பை ரூ.8,500 யாக உயர்த்தியுள்ளார்.
Parle Agro என்பது 1985 ஆம் ஆண்டில் பிரகாஷ் சௌகான் என்பவரால் நிறுவப்பட்ட இந்திய உணவு மற்றும் பான நிறுவனம் ஆகும்.
இதில் பிரகாஷ் சௌகானின் மகள் நதியா சௌகான், 2003 ஆம் ஆண்டில் தன்னுடைய 17 வது வயதில் சேர்ந்தார், அப்போது நிறுவனத்தின் வருவாய் ரூ.300 கோடி மட்டுமே இருந்தது.
நிறுவனத்தின் வருவாய் Frooti என்ற ஒரே தயாரிப்பை மிகவும் நம்பியிருப்பதை நதியா கவனித்து, அதை மாற்றுவதற்கு முயற்சித்தார்.
2005 ஆம் ஆண்டில் அவர் அப்பி ஃபிஸ்ஸை(Appy Fizz) அறிமுகப்படுத்தினார், அது வெற்றிகரமான தயாரிப்பாக இருந்தது, மேலும் பிற தயாரிப்புகளை நிறுவனம் அறிமுகப்படுத்த உதவியது.
பின்னர், இந்தியாவின் முதல் பேக்கேஜ் செய்யப்பட்ட நிம்பூ பானியையும்(Nimboo Pani) அவர் அறிமுகப்படுத்தினார்.
நதியாவும், அவரது சகோதரியும் பல புதிய உற்பத்தி நிலையங்களில் முதலீடு செய்து, 2015 ஆம் ஆண்டில் ஷாருக்கான் பிராண்ட் தூதராக நியமித்து Frooti-ஐ மீண்டும் அறிமுகப்படுத்தினர்.
அதிவேக வெற்றி
பல வெற்றிகளுக்குப் பிறகு, நிறுவனத்தின் பேக்கேஜ் குடிநீர் பேலி, ரூ.1000 கோடி வர்த்தகமாக மாறியது. 2030 ஆம் ஆண்டிற்குள் நிறுவனத்தை ரூ.10,000 கோடி பிராண்டாக மாற்றுவதே நதியாவின் லட்சியமாக தற்போது உள்ளது.
BT அறிக்கைகளின் படி, நதியா நிறுவனத்தின் வருடாந்திர வருவாயை ரூ.30,000 கோடி என்னும் இலக்கை அவர் இப்போது குறிவைத்துள்ளார், மேலும் பார்லேயின் விநியோகத்தை இரட்டிப்பாகி 4 மில்லியன் கடைகளை சென்றடைய எண்ணுகிறார்.
மதிப்பு கூட்டப்பட்ட பால் பண்டமான ஸ்மூத்தின் அறிமுகம் மற்றும் அதன் நியாயமான விலையிலான ரூ.10 பேக்குகள் ஆகியவற்றில் அவர் ஆரம்ப வெற்றி பெற்றிருந்தாலும், தற்போது ஃப்ரூட்டிக்கு ரூ.5 என்ற புதிய பேக்கை அறிமுகப்படுத்தி வருகிறார், இது நுகர்வோரை ஈர்க்கும் திறன் கொண்டது என்று அவர் கருதுகிறார்.
தற்போது நதியா செளகான் Parle Agro நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாகவும் இணை நிர்வாக இயக்குநராகவும் உள்ளார்.
2023 ஆம் ஆண்டில், Parle Agro நிறுவனம் சுமார் ரூ.8500 கோடி வருவாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.