சமந்தாவை பிரிகிறேன்! கணவர் நாக சைதன்யா அதிகாரபூர்வ அறிவிப்பு... ரசிகர்கள் கடும் அதிர்ச்சி
நடிகை சமந்தாவும் தானும் பிரியவுள்ளதாக அவர் கணவர் நாக சைதன்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது, ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளவர் சமந்தா. இவருக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த 2017ல் திருமணம் நடந்தது.
காதல் திருமணம் செய்து கொண்ட சமந்தாவும். நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரியப் போவதாகவும் இதற்காக நீதிமன்றத்தை இருவரும் நாடி உள்ளதாகவும் தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி வந்தது.
மூன்று தடவை இருவரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் அவர்கள் பிரிவதில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
— chaitanya akkineni (@chay_akkineni) October 2, 2021
இந்த நிலையில் சமந்தாவும் தானும் பிரியவுள்ளதாக நாக சைதன்யா அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்துள்ளார்.
இது குறித்த அவரின் டுவிட்டர் பதிவில், நானும் சமந்தாவும் கணவன், மனைவி பந்தத்தில் இருந்து பிரிவதாக முடிவு செய்துள்ளோம். இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு ரசிகர்கள், ஊடகங்கள், நலம்விரும்பிகள் ஆதரவு கொடுத்து எங்களின் தனிப்பட்ட வாழ்வை கடக்க ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறோம்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
சமந்தா - நாகசைதன்யா தம்பதி பிரியவுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.