பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நடிகர் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம்.., மணப்பெண் யார் தெரியுமா?
நடிகர் நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
நாக சைதன்யா- சமந்தா பிரிவிற்கும் இவர்களின் காதல் தான் காரணமா என்ற கேள்வியைஅதற்கேற்ப ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.
நடிகை சமந்தா அறிமுகமான "ஹே மாய சேசாவே" படத்தில் இணைந்து நடித்த நாக சைதன்யாவுடன் காதல் வயப்பட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும் சமந்தா சினிமாவில் நடித்து வந்த நிலையில் திருமணமான 4 வருடத்தில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இவர்களின் விவாகரத்திற்கு நாக சைதன்யா- சோபிதா காதல் தான் காரணம் என நெட்டிசன்கள் பலரும் கூறி வந்தனர்.
அதற்கேற்ப,இருவரும் ஒரே இடத்திற்கு சுற்றுலா சென்று வந்த புகைப்படங்கள் தனித் தனியாக வெளியாகின.
வெளியான புகைப்படங்களை வைத்து நாக சைதன்யாவும் சோபிதாவும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டன.
"We are delighted to announce the engagement of our son, Naga Chaitanya, to Sobhita Dhulipala, which took place this morning at 9:42 a.m.!!
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) August 8, 2024
We are overjoyed to welcome her into our family.
Congratulations to the happy couple!
Wishing them a lifetime of love and happiness. 💐… pic.twitter.com/buiBGa52lD
இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் உள்ள நாகசைதன்யாவின் இல்லத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளன.
இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களை நாகசைதன்யாவின் தந்தை நடிகர் நாகர்ஜுனா தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |