சமந்தாவுக்கு சைதன்யா ஒரு போதும் தூரோகம் செய்யவில்லை! நெருங்கிய நண்பர் சொன்ன தகவல்
நடிகை சமந்தா, நாக சைதன்யா பிரிவுக்கு என்ன தான் காரணம் என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், நாக சைதன்யாவின் நெருக்கமான குடும்ப உறுப்பினர் சில விஷங்களை பகிர்ந்துள்ளார்.
பிரபல ஜோடியான சமந்தா-நாக சைதன்யா தம்பதி, கடந்த அக்டோபர்(2021) மாதம் இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இது திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது வரை இவர்களின் பிரிவிற்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
இந்நிலையில், நாக சைதன்யாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்(பெயர் பதிவிடவில்லை) பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவகாரத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி அவர்களிடம் கேட்க முடியாது.
உண்மையான தகவல் தெரியாமல், சமந்தாவின் ரசிகர்களோ, ஆதரவாளர்களோ பல பொய்யான விஷயங்களை பரப்பி வருகின்றனர். ஆனால், நான் ஒரு விஷயத்தை மற்றும் உறுதியாக சொல்வோன்.
நாக சைதன்யா, சமந்தாவிற்கு ஒரு போதும் துரோகம் செய்யவில்லை. அவர்கள் திருமணத்திற்கு முன்பே பல ஆண்டுகளாக பழகி வந்தனர்.
நாக சைதன்யாவை சமந்தா திருமணம் செய்து கொள்ளும் முன் என்னிடம் நாக சைதன்யாவை பற்றி கூறும் போது, நாங்கள் முதல் படத்திலே(2010) இருவரும் சேர்ந்து நடித்த போது, நெருக்கமாக பழக ஆரம்பித்துவிட்டோம்.
என் பர்ஸில் வெறும் 30 டொலருடன் அமெரிக்கா சென்ற போது, அவர் என்னுடன் இருந்தார். அவர் ஒரு மனிதனாகவும், நடிகையாகவும் என்னுடைய பயணத்தில் மிக முக்கியமானவாராக இருந்தார்.
இப்போது நான் அவரை திருமணம் செய்து கொள்ள தயாராகிவிட்டேன் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.