தமிழகம் TO இலங்கை கப்பல்: முதல் பயணத்தில் பயணிகளுக்கு காத்திருந்த ஏமாற்றம்
தமிழக மாவட்டம், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் பயணம் இன்று தொடங்கவிருந்த நிலையில் வேறு திகதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிரியா பாணி
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்து, அதற்காக ரூ.3 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. பின்பு, தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சி நடைபெற்றது.
இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் கொச்சியில் கப்பல் கட்டும் பணி நடைபெற்று, முடிவடைந்து ‘சிரியா பாணி’ என பெயரிடப்பட்டது. இது, 150 பயணிகள் பயணிக்கும் வகையில் குளிர்சாதன வசதியுடன் வடிவமைக்கப்பட்டது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இருப்பதால் 3.30 மணி நேரத்தில் இலங்கை செல்லலாம். இதற்கான பயண கட்டணம் 18% ஜி.எஸ்.டியுடன் ஒருவருக்கு ரூ.6,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வேறு திகதி மாற்றம்
இந்நிலையில், நாகை - இலங்கை இடையே நேற்று முன்தினம், கேப்டன் பிஜு ஜார்ஜ் தலைமையில் 14 ஊழியர்கள் இந்த பயணிகள் கப்பல் சோதனை ஓட்டத்தை நடத்தினர். இன்று (அக்.10) முதல் பயணிகளுடன் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பயணிகளுடன் கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இன்று தொடங்கவிருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து அக்டோபர் 12 -ம் திகதி, காலை 7 மணிக்கு தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |