மக்கள்தொகை அதிகரிக்கிறது, என்னைப்போல் திருமணம் செய்துகொள்ளாமல் இருங்கள்! இந்திய அமைச்சர்
இந்திய மாநிலம் நாகாலாந்தின் அமைச்சர் மக்கள் தொகை அதிகரிப்பதால் தன்னை போல் அனைவரும் திருமணம் செய்துகொள்ளாமல் இருங்கள் எனக் கூறியுள்ளார்.
உலக மக்கள்தொகை தினமான இன்று, நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா இணையத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், 'உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, மக்கள்தொகைப் பெருக்கத்தின் பிரச்சனைகளில் விழிப்புணர்வுடன் இருப்போம். மற்றும் குழந்தைப்பேறு குறித்த தகவல்களை அறிந்த தேர்வுகளை புகுத்துவோம்.
இல்லையெனில் என்னைப் போலவே சிங்கிளாக (திருமணம் செய்துகொள்ளாமல்) இருங்கள். அப்போது தான் ஒன்றாக இணைந்து நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்க முடியும். இன்றே வந்து சிங்கிள் இயக்கத்தில் இணையுங்கள்' என தெரிவித்துள்ளார்.
On the occasion of #WorldPopulationDay, let us be sensible towards the issues of population growth and inculcate informed choices on child bearing.
— Temjen Imna Along (@AlongImna) July 11, 2022
Or #StaySingle like me and together we can contribute towards a sustainable future.
Come join the singles movement today. pic.twitter.com/geAKZ64bSr
ஏற்கனவே டெம்ஜென் இம்னா, எங்கள் கண்கள் (வடகிழக்கு இந்தியர்கள்) சிறியதாக இருப்பதால் நிகழ்ச்சிகளின் போது தூங்குவதற்கு வசதியாக இருக்கும் என கூறி பிரபலமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.