இந்தியா- இலங்கை கப்பல் பயணம்: இனி பணமும் நேரமும் மிச்சம்
இந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா - இலங்கை கப்பல் பயணம்
காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இடையை சேவையில் ஈடுபடவுள்ள கப்பலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இந்த கப்பலானது 60 கடல் மைல்கள் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசந்துறைமுகத்திற்கு 150 பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை விரைவு பயணியர் கப்பல் (High Speed Passenger Ferry) என்று அழைக்கின்றனர்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க பயணிகள் கப்பல் போக்குவரத்து, இலங்கை மக்கள் குறிப்பாக, தமிழ் மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள், வணிகம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஆகிய தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்வதற்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பலானது கேரளா மாநிலத்தில் கொச்சின் பகுதியில் வடிவமைக்கப்பட்டு, நேற்றைய தினம் நாகை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் சோதனை ஓட்டம் இன்று ஆரம்பமாவுள்ளது. இதில் ஊழியர்கள் பயணம் செய்யவுள்ளனர்.
மேலும் வருகின்ற 10 ஆம் திகதி இது நடைமுறைக்கு வருவதோடு, நாகையிலிருந்து புறப்பட்டு மூன்றரை மணி நேரத்தில் இலங்கை சென்றடையும் என்கிறார்கள்.
இந்நிலையில் இதில் பயணிப்பதற்கு ஒருவர் இரு வழி பயணக் கட்டணமாக 53,500 ரூபாயும் (இலங்கை பணம்) ஒரு வழி பயணக் கட்டணமாக 27,000 (இலங்கை பணம்) ரூபாயும் செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |