ரூ.3,010 கோடி சொத்து மதிப்பு! ரஜினி, விஜய் இல்லை..தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் இவர்தான்
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தனது சொத்து மதிப்பின் மூலம் தென்னிந்தியாவின் பணக்கார நடிகராக உள்ளார்.
நாகார்ஜுனா
1986ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நாகார்ஜுனா(64).
நாகேஸ்வர ராவின் மகனான இவர் 80 தெலுங்கு படங்களில் நடித்து பிரபல நடிகராக உள்ளார். தெலுங்கு மட்டுமன்றி தமிழ், ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து தென்னிந்தியாவின் முக்கியமான நடிகராக வலம் வருகிறார்.
இவரது இரு மகன்களான நாக சைதன்யா, அகில் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். தற்போது நாகார்ஜுனா பிக் பாஸ் (தெலுங்கு) நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
வெளியே சென்ற 3 போட்டியாளர்கள் உள்ளே: பிரதீப் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்! பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு
நடிப்பது மட்டும் இல்லாமல் அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் பேனரில் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். மேலும் இந்திய சூப்பர் லீக்கில் முதலீடு செய்துள்ள நாகார்ஜுனா, கேரள பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியின் இணை உரிமையாளராகவும் உள்ளார்.
ரூ. 3,010 கோடி சொத்து
இவ்வாறாக வருமானம் ஈட்டும் நாகார்ஜுனா, விளம்பர படங்கள் மூலமாகவும் பணம் பார்க்கிறார்.
இதன்மூலம் தென்னிந்தியாவின் பெரிய பணக்காரராக நாகார்ஜுனா உயர்ந்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 3,010 கோடி என தெரிய வந்துள்ளது.
சொகுசு வாழ்க்கையில் திளைக்கும் நாகார்ஜுனா, ஹைதராபாத் நகரில் பிரம்மாண்டமான மையத்தையும், 45 கோடி மதிப்பில் பங்களா ஒன்றையும், தனியார் ஜெட் விமானம் ஆகியவற்றையும் வைத்துள்ளார்.
GQ-யின் அறிக்கையின்படி பணக்கார தென்னிந்திய நடிகர்களின் பட்டியலில் நாகர்ஜுனா முதலிடத்தில் உள்ளார்.
அவருக்கு அடித்த இடத்தில் டகுபதி வெங்கடேஷ் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.2,200 ஆகும். அடுத்த இடத்தில் சிரஞ்சீவி (ரூ.1,650), ராம்சரண் (ரூ.1,370) ஆகியோர் உள்ளனர். தமிழ்ப்பட நடிகர் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு ரூ.430 கோடி என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |