சமந்தா-நாக சைதன்யா பிரிவு! முதன் முறையாக உருக்கமாக பேசிய மாமனார் நாகர்ஜுனா: வெளியிட்ட பதிவு
பிரபல திரைப்பட நடிகரும், சமந்தாவின் மாமனாருமான நகர்ஜுனா முதல் முறையாக அவர்கள் பிரிவு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாகவே நடிகை சமந்தாவின் விவகாரத்து குறித்த பேச்சு அதிகம் எழுந்தது.
ஆனால் அது குறித்து சமந்தா எதுவுமே வாய் திறக்காமல் இருந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இருவருமே இன்று நாங்கள் இருவரும் பிரிய முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
இதைக் கண்ட இவர்களின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இது குறித்து எதுவுமே வாய் திறக்காமல் இருந்த மாமனார் நாகர்ஜுனா முதன் முறையாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இவர்களின் பிரிவு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) October 2, 2021
அதில், இதைப் பற்றி பேசவே எனக்கும் கடும் வேதனையாக இருக்கிறது. சமந்தா மற்றும் நாகவுக்கும் இடையே என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை.
இது அவர்களின் சொந்தப் பிரச்சனை, தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் கணவன், மனைவி பிரச்சனை. என்னைப் பொறுத்தவரை இருவருமே என்னுடைய செல்லம் தான், அதிலும் குறிப்பாக சமந்தா என்று குறிப்பிட்டுள்ள நாகர்ஜுனா, இருவருக்கும் தைரியத்தை கடவுள் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.