பல பெண்களை காதலிப்பதாக ஏமாற்றிய காசியை நினைவிருக்கா? 400 வீடியோ, 1900 போட்டோ... சிபிசிஐடி பகீர் தகவல்
தமிழகத்தை அதிர வைத்த நாகர்கோவில் காசி வழக்கில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் அது குறித்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி (26). பெண் மருத்துவர் உள்பட பல பெண்களுடன் பேஸ்புக் மூலம் நெருக்கமாக பழகியுள்ளார். பின்னர் அந்த பெண்களிடம் காதல் அம்பை எய்துள்ளார்.
இதில் சிக்கும் பெண்களை தனியாக வரசொல்லி அவர்களுடன் தனிமையில் இருந்து அதை அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்திருந்தார். இதையடுத்து அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்பிவிடுவதாக காசி மிரட்டி பணம் பறித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் காசி குண்டர் சட்டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி பொலிசாரிடம் சென்றது. வழக்கு விசாரணைக்கு செல்லும் போது கை விலங்குகளுடன் இருந்த காசி தன் கைகளை ஹார்டின் ஷேப்பில் வைத்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகின.
இந்த வழக்கில் காசியின் தந்தை தங்க பாண்டியனும் கைது செய்யப்பட்டார். அவரின் ஜாமீன் மனு ஏற்கனவே மூன்று முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒருமுறை கன்னியாகுமரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த முறையும் அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் காசி தொடர்பில் சிபிசிஐடி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி காசி 10 பெண்களை காதலித்து ஏமாற்றியதாகவும், அவர் லேப்டாப்பில் 400 ஆபாச வீடியோக்கள், 1900 படங்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.