தமிழக பாஜக மாநில தலைவரானார் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா தேசிய தலைமை தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள 19 மாநிலங்களில், புதிய தலைவர்களை நியமனம் செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கான அறிவிப்பை மாநில துணைத்தலைவரும், தேர்தல் அதிகாரியுமான சக்ரவர்த்தி வெளியிட்டார்.
அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை கமலாலயத்தில் மாநில தலைவருக்கான விருப்ப மனு தாக்கல் தொடங்கியது.
ஆனால், நயினார் நாகேந்திரன் தவிர வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை.
இறுதியில் தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழக பாஜகவின் 13வது தலைவர் ஆவார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |