எந்த அணியாக இருந்தாலும் எங்களால் வீழ்த்த முடியும்: சூளுரைத்த வங்காளதேச கேப்டன்
சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் எந்த அணியையும் தங்களால் வீழ்த்த முடியும் என வங்காளதேச அணித்தலைவர் ஷாண்டோ தெரிவித்துள்ளார்.
ஷாண்டோ
பாகிஸ்தானில் இன்னும் 3 நாட்களில் சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் வங்காளதேச அணி "ஏ" பிரிவில் இடம்பிடித்துள்ளது.
நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தலைமையிலான வங்காளதேச அணி CT2025 தொடரில் களமிறங்குகிறது.
தங்களது அணியில் அனைவரும் சரியாக பணியை செய்தால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (Najmul Hossain Shanto) தெரிவித்துள்ளார்.
வங்காளதேச அணி பலமாக உள்ளது
அவர் இதுதொடர்பாக கூறுகையில், "சாம்பியன் ஆக வேண்டும் என்ற முனைப்போடு சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கு செல்கிறோம். துடுப்பாட்ட வீரர்கள், வேகப்பந்து, சுழற்பந்து வீச்சாளர்கள் என அனைத்திலும் வங்காளதேச அணி பலமாக உள்ளது.
எல்லாரும் தங்கள் பணியை சரியாக செய்தால் போதும், எந்த அணியாக இருந்தாலும் எங்களால் வீழ்த்த முடியும்" என தெரிவித்துள்ளார்.
நஜ்முல் 47 ஒருநாள் போட்டிகளில் 1,488 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 3 சதங்கள், 9 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |