ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம்
Naked Gold Statue of Trump at EU Parliament: ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தங்க நிற நிர்வாண சிலை வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் நிர்வாண சிலை
பிரான்ஸில் ஸ்ட்ராஸ்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் டேனிஷ் கட்டிடத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தங்க நிற நிர்வாண சிலை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை கண்காட்சியை டேனிஷ் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பெர் கிளாசென் ஏற்பாடு செய்து இருந்தார்.
பருவநிலை மாற்றம், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக விழுமியங்கள் ஆகியவற்றுக்கு எதிரான டிரம்பின் நிலைப்பாடுகள், அச்சுறுத்தல் வாய்ந்தவை என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த கலைப்படைப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலைக்கு எதிர்ப்புகள் உருவான நிலையிலும், ஒரு அச்சத்திலும், சுய தணிக்கையிலும் தொடர்ந்து வாழ முடியாது என்று பெர் கிளாசென் தெரிவித்துள்ளார்.
மேலும் சிலை வைக்கப்பட்டுள்ள இந்த இடம் முக்கிய ஐரோப்பிய பிரமுகர்கள் வருகை தரும் சரியான் இடம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிலையில் எழுதப்பட்டிருந்த வாசகம்
ஆரஞ்சு பிளேக் என்று அழைக்கப்படும் இந்த 23 காரட் தங்கம் பூசப்பட்ட இந்த சிலை, டேனிஷ் கலைஞர் ஜென்ஸ் கால்ஸ்ஜோட் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.
8.5 அடி உயரம் கொண்டுள்ள இந்த சிற்பத்தில், தன்னை விட சிறிய மனிதன் ஒருவனின் தோள் மீது டிரம்ப் நிர்வாணமாக அமர்ந்து இருப்பது சித்தரிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிற்பத்தின் கீழே “நான் ஒரு மனிதனின் மீது அமர்ந்து இருக்கிறேன், அவன் என்னை பார்த்து சரிந்து கொண்டு இருக்கிறேன், அவனுக்கு எந்தவொரு உதவிகளையும் நான் செய்வேன். ஆனால் அவன் முதுகில் இருந்து கீழே இறங்க மாட்டேன் என்று டிரம்ப் கூறுவது போல் எழுதப்பட்டுள்ளது.