சுவிஸ் நெடுஞ்சாலையில் பெண் செய்த மோசமான செயல்
சுவிஸ் நகரமொன்றில், நெடுஞ்சாலையொன்றில் ஆடையின்றி கலாட்டா செய்த பெண் ஒருவரால் பரபரப்பு உருவானது.
நெடுஞ்சாலையில் பெண் செய்த மோசமான செயல்
கடந்த வெள்ளிக்கிழமை மதியம், சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் A9 நெடுஞ்சாலையில் காரில் பயணித்துக்கொண்டிருந்தார் ஒரு பெண்.
திடீரென தனது காரிலிருந்து இறங்கிய அந்தப் பெண், சாலையில் நடுவில் அமைந்திருந்த தடுப்புச் சுவரின்மீது ஏறி நின்றபடி அரசியல் தொடர்பான சுலோகங்களைக் கூறி முழக்கமிட ஆரம்பித்துள்ளார். அவர் சுத்தமாக ஆடை எதுவும் அணியவில்லை.
அதைத் தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட, உடனடியாக அங்கு பொலிசார் விரைந்துள்ளனர்.
அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் எதற்காக அப்படிச் செய்தார், அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுமா என்பது குறித்து இப்போதைக்கு எதுவும் தெரியவில்லை என சுவிஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |