விஜய் அரசியலுக்கு தகுதியே இல்லாதவர் - நக்கீரன் கோபால் (காணொளி)
தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு தகுதியில்லாதவர் என நக்கீரன் கோபால் கூறியுள்ளார்.
கரூர் துயர சம்பவம் குறித்து பேசிய நக்கீரன் கோபால், 41 பேர் உயிரிழந்தது திட்டமிட்ட மரண பலி என்றும், நரபலிக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
திருவாரூரில் தவெக கூட்டம் நடந்தபோது அசம்பாவிதம் நேர்ந்திருக்கும். ஆனால் தாலுகா அலுவலகத்தை அதன் பாதுகாவலர் நெரிசலின்போது திறந்துவிட்டதால் 500 பேர் உள்ளே போய் தப்பித்ததாக செய்தி.
செந்தில் பாலாஜி விடயத்தையும், ஆம்புலன்ஸ் விடயத்தையும் நீதிமன்ற விவாதத்தில் வைத்தார்களா என்று மூத்த வழக்கறிஞரிடம் கேட்டேன். இல்லை என்றுதான் பதில் வந்தது.
அப்படியென்றால், திமுக தான் காரணம் என்ற பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டுசெல்வதன் யுக்தி அது.
10 பேர் செத்தாலும் பரவாயில்லை; நான் 10 ரூபாய் விடயத்தை பேசுவேன் என்பவரிடம் எந்த நியாயத்தை பேச முடியும் என்று நக்கீரன் கோபால் காட்டமாக பேசியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |