சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மாணவர்கள்: பள்ளி முதல்வரை குத்திக் கொன்ற கொடூரம்
Nalgonda school principal murder case 2 student arrested: தெலுங்கானாவில் பணத்திற்காக பள்ளி முதல்வரை மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி முதல்வரை குத்தி கொலை செய்த மாணவர்கள்
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தின் கொடமள்ளேபள்ளி பகுதியில் அமைந்துள்ள நாகார்ஜுனா பப்ளிக் பள்ளியின் முதல்வரான கள்ளூ ரூபா ரெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு பள்ளி மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் பணம் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்த குற்றத்தை செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?
கடந்த ஆகஸ்ட் 12ம் திகதி ரூபா ரெட்டி அவரது இல்லத்தில் 27 முறை கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இறந்து கிடந்தார்.
முன்னதாக ஹைதராபாத்தில் இருந்த அவரது கணவர் ரூபா ரெட்டியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போது பதில் கிடைக்கவில்லை என்பதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை தொடர்பு கொண்டுள்ளார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டிற்கு வந்த பார்த்த ரூபா ரெட்டி உயிரிழந்து கிடப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ரூபா ரெட்டி அவரது அத்தையுடன் கடைசியாக பேசிக் கொண்டிருந்த போது பாபு என்ற பெயரை உச்சரித்துள்ளார்.
இதனை முதன்மையாக கொண்டு விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார் ரூபா ரெட்டி பணியாற்றி வந்த பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.
அவர்கள் ரூபா ரெட்டியின் வீட்டுக்குள் நுழைந்து 2.50 லட்சத்தை திருடி விட்டு தப்பிக்க முயன்ற போது ரூபா ரெட்டி அவர்களை அடையாளம் கண்டு கொண்டதால் அந்த மாணவர் ரூபா ரெட்டியை 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |