LIVE: நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் இரண்டாம் நாள் திருவிழா
நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமான ஒரு கோவில்.
இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
நல்லூர் 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது.
இக்கோயில் யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்ததாக அறியப்படுகிறது.
இந்நிலையில், புகழ்பெற்ற இக்கோவிலில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, இன்று இரண்டாம் நாள் விழாவில் கந்தன் அருள் பெற வீட்டில் இருந்துக்கொண்டே இந்த நேரலையை தொடர்ந்து பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |