உலகக்கோப்பை முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வி! மீண்டு எழுவோம் என நம்பிக்கை
நமீபியா வீரர் பிரைலிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்
இலங்கை அணியில் எதிர்பார்க்கப்பட்ட பனுக ராஜபக்சே 20 ஓட்டங்கள் எடுத்தார்
அவுஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நமீபியா அணியிடம் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.
கீலங்கில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய நமீபியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜன் பிரைலிங்க் 28 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்தார்.
பிரமோத் மதுஷன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய இலங்கை அணி ஓட்டங்கள் எடுக்க தடுமாறியது. ராஜபக்சே மற்றும் தசுன் ஷனகா தவிர ஏனைய வீரர்கள் சோபிக்க தவறினர்.
Twitter (@ICC)
இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் 108 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஷனகா 23 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்தார். நமீபியா அணியின் தரப்பில் விசே, ஸ்கோல்ட்ஸ், ஷிகோங்கோ மற்றும் பிரைலிங் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Not the result we wanted ?, but we will look to bounce back in the matches ahead. #T20WorldCup #RoaringForGlory #SLvNAM pic.twitter.com/Ped5rilyDZ
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) October 16, 2022
Twitter (@ICC)