இலங்கை எம்.பி நாமல் ராஜபக்ஷ கைது
namal Rajapaksa arrested by CIABOC: நாமல் ராஜபக்ஷ லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ கைது
இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் இன்று ஆஜராக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்காக ஏர்பஸ் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பு ஏற்று இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் முன் ஆஜாரான நாமல் ராஜபக்ஷவிடம் சுமார் 5 மணி நேர்மை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விசாரணையின் முடிவில், நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |