சூடுப்பிடிக்கும் இலங்கை ஜனாதிபதி தேர்தல் - வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அதன் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தலை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடத்தப்படும் என்றும், வேட்புமனுக்கள் 2024 ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்மூலம், 2024 ஆகஸ்டு 15 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தினமாகவும், இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தை மேற்படி தேர்தலுக்கான வேட்பாளர்களின் நியமன இடமாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு பிரகடனப்படுத்துகிறது.
வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச
இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சற்று முன்னர் நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து இதனை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |