மகிந்த பாதுகாப்பான இடத்தில் உள்ளார்! நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்: நாமல் கூறிய முக்கிய தகவல்
இலங்கையை விட்டு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேற மாட்டார் என அவர் மகன் நாமல் கூறியுள்ளார்.
இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்த நிலையில் தனது பிரதமர் பதவியை மகிந்த ராஜினாமா செய்தார். அவர் நாட்டை விட்டு வெளியேறுவார் என்பது போன்ற செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் அவரின் மகன் நாமல் ராஜபக்சே சர்வதேச ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், நாங்கள் வெளியேறப் போகிறோம் என்று நிறைய வதந்திகள் பரவுகின்றன, நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்.
வேடிக்கை பார்த்து கொண்டு வீட்டில் இருக்க விரும்பவில்லை! மக்களுடன் இணைந்த இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்
எனது தந்தை பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறார் எனவும் அவர் குடும்பத்துடன் தொடர்பு கொள்கிறார் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் மகிந்த ராஜபக்சே விலகமாட்டார்
புதிய பிரதமரை தேர்வு செய்வதில் மகிந்த ராஜபக்சே முக்கிய பங்கு வகிப்பார்.
தாங்கள் எப்போதும் எமது மக்களுக்கு ஆதரவாக நிற்போம் என கூறியுள்ளார்.