12 சிக்ஸர், 16 பவுண்டரிகள்..64 பந்தில் 173 ஓட்டங்கள் விளாசிய நமன் திர்
Naman dhir 173 runs vs mohali kings: ஷேர்-இ-பஞ்சாப் டி20 போட்டியில் அம்ரித்சார் சூர்மாஸ் அணித்தலைவர் நமன் திர் 173 ஓட்டங்கள் விளாசினார்.
நமன் திர் 64 பந்துகளில் 173 ஓட்டங்கள் விளாச, அம்ரித்சார் சூர்மாஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ஓட்டங்கள் குவித்தது.
ஷேர்-இ-பஞ்சாப் டி20 போட்டி
அம்ரித்சார் சூர்மாஸ் மற்றும் மொஹாலி கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஷேர்-இ-பஞ்சாப் டி20 போட்டி மொஹாலியில் நடந்து வருகிறது.
🥶 NAMAN DHIR SHOW IN THE SHER-E-PUNJAB T20 LEAGUE! 🔥
— ʀ ᴜ ᴋ ᴍ ɪ ɴ ɪ ᶠᵃⁿ (@rukmini_fan) September 8, 2026
Naman smashed 100 runs from just 37 balls 🥵🥵
Absolute carnage from Naman Dhir! 🥵🏏#NamanDhir #SherEPunjabT20League pic.twitter.com/NPGyE3AVtO
முதலில் துடுப்பாட்டத்தைத் தொடங்கிய அம்ரித்சார் சூர்மாஸ் அணியில், தலைவர் நமன் திர் சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.
மறுமுனையில் ஜஷன்ப்ரீத் சிங் 25 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நமன் திர் ருத்ரதாண்டவம்
ஏனைய வீரர்கள் சொதப்ப, தனியாளாக நமன் திர் (Naman Dhir) ருத்ரதாண்டவம் ஆடி சதம் அடித்தார்.
இதன்மூலம் அம்ரித்சார் சூர்மாஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ஓட்டங்கள் குவித்தது.
நமன் திர் 64 பந்துகளில் 173 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 12 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள் அடங்கும்.
ஆயுஷ் கோயல் 4 விக்கெட்டுகளும், ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷிதீப் சிங், தேஜ்ப்ரீத் சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |