சுவிஸில் குறைந்த வருவாயில் குடும்பத்துடன் வாழ சிறந்த இடம் இது தான்
சுவிட்சர்லாந்தில் செலவு குறைவாக பிள்ளைகள் மற்றும் குடும்பத்துடன் வாழத்தகுந்த இடமாக வலாய்ஸ் மண்டலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
வலாய்ஸ் மண்டலத்தை பொருத்தமட்டில் தொழிற்சாலைகளுக்கும் மருந்து நிறுவனங்களுக்கும் கைக்கடிகார தயாரிப்புக்கும் முதன்மை இடமாகும்.
வெளிநாட்டு ஊழியர்கள் சுவிட்சர்லாந்தை விரும்ப காரணமாக கூறப்படுவது, அதிக ஊதியம், இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்பு. ஆனாலும், சுவிஸில் வாழும் அல்லது பணியாற்றும் வெளிநாட்டினர், சுவிஸ் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்து வாழ்வது கடினம் என்றே தெரிவித்துள்ளனர்.
வலாய்ஸ் மண்டலம் குடும்பத்துடன் வாழ சிறந்த பகுதி என ஆய்வில் தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி மத்திய மற்றும் கிழக்கு சுவிட்சர்லாந்திலும் குறிப்பிட்ட சில மண்டலங்களில் குறைந்த கட்டணத்தில் குடும்பங்களுக்கும், தம்பதிகள் அல்லது தனி நபர்களாலும் வாழ முடியும் என தெரிய வந்துள்ளது.
வலாய்ஸ் மண்டலம் குழந்தைகளுடன் உள்ள தம்பதிகளுக்கு மிகவும் சாதகமான வாழ்க்கை நிலைமைகளை வழங்குகிறது எனவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.