167 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! முதல் சதம் விளாசிய வீரர்
சதம் விளாசிய மைக்கேல் வான் லிங்கன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்
24 வயதான மைக்கேல் வான் லிங்கனுக்கு இது முதல் சதம் ஆகும்
பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நமிபியா 167 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
நமிபியா மற்றும் பப்புவா நியூ கினியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி போர்ட் மோர்ஸ்பையின் அமினி பார்க் மைதானத்தில் நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நமிபியா முதலில் துடுப்பாட்டம் செய்தது.
தொடக்க வீரர் லோகன் லௌரன்ஸ் 28 ஓட்டங்களும், திவன் ல காக் 20 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பார்ட் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் எராஸ்மஸ் மற்றும் மைக்கேல் வான் லிங்கன் இருவரும் கைகோர்த்தனர்.
அதிரடியாக அரைசதம் விளாசிய எராஸ்மஸ் 55 பந்துகளில் 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும் இறுதிவரை களத்தில் நின்ற மைக்கேல் வான் லிங்கன் முதல் சதம் விளாசினார். அவர் 107 பந்துகளில் 119 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கும்.
ICC MEN'S CRICKET WORLD CUP LEAGUE 2
— Cricket PNG (@Cricket_PNG) September 20, 2022
Tue 20 Sep | 10:00 am
MATCH UPDATE
MATCH 5 | PNG vs NAMIBIA | AMINI PARK
After the First Innings, Namibia 284/4
Live Stream and Scorecard: https://t.co/a08DcpUrny#backthebarras pic.twitter.com/dg4ZQq0lDT
பப்புவா நியூ கினியா தரப்பில் நார்மன் வனுவே மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் ஆடிய பப்புவா நியூ கினியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணி 42.4 ஓவர்களில் 117 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக நார்மன் வனுவே 38 ஓட்டங்களும், சார்லஸ் அமினி 27 ஓட்டங்களும் எடுத்தனர். நமிபியா அணி தரப்பில் பெர்னார்ட் ஸ்சோல்ட்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஃப்ரைலிங்க் மற்றும் ஜன் நிகோல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.