இறுதிவரை நடந்த போராட்டம்! தகர்ந்துபோன உலகக்கோப்பை கனவு.. களத்திலே கண்கலங்கிய வீரர்
இந்தப் போட்டியில் 50 ஓட்டங்கள் மற்றும் ஒரு விக்கெட் வீழ்த்திய முகமது வசீம் ஆட்டநாயகன் விருது பெற்றார்
டேவிட் விஸே 39 போட்டிகளில் 453 ஓட்டங்களுடன் 41 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்
அமீரக அணியுடனான தோல்வியால் நமீபியா அணி சூப்பர் 12 வாய்ப்பை இழந்தது.
உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நமீபியா அணிகள் மோதின. ஏற்கனவே ஒரு வெற்றியை பெற்றிருந்த நமீபியா, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 12 சுற்றுக்கு செல்ல முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது.
முதலில் ஆடிய அமீரக அணி 3 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக முகமது வசீம் 50 ஓட்டங்களும், கேப்டன் ரிஸ்வான் 43 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய நமீபியா அணியில் விக்கெட்டுகள் சரிந்தன. அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 69 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது. அப்போது அணியின் மூத்த வீரர் டேவிட் விஸே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.
இதனால் மிகுந்த வேதனையடைந்த அவர் பெவிலியன் திரும்பியதும் தனது சோகத்தை வெளிப்படுத்தினார். 37 வயதாகும் விஸேவிற்கு இது கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம்.
நமீபியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ஓட்டங்களே எடுத்ததால் அமீரகம் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. விஸே 36 பந்துகளில் 55 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) எடுத்தார். ட்ரம்பெல்மன் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
SAD ENDING FOR NAMIBIA
— Official Cricket Namibia (@CricketNamibia1) October 20, 2022
Well done to the Namibian Eagles for getting this far and representing Namibia at another World Cup, you have made the Nation proud. Congratulations to Sri Lanka and the Netherlands for making it to the Super 12, good luck guys ?#EaglesPride #T20WorldCup pic.twitter.com/daSgeZqWbr