சிக்ஸர் மழையில் 33 பந்தில் சதம்! ஜாம்பவான்கள் செய்யாத சாதனையை படைத்த 22 வயது வீரர்
நேபாள அணிக்கு எதிரான டி20 போட்டியில் நமீபிய வீரர் ஜேன் நிக்கோல் லோஃபிடி ஈட்டன் அதிவேக சதம் விளாசி சாதனை படைத்தார்.
ஜேன் நிக்கோல் லோஃபிடி ஈட்டன்
கிர்டிபூரில் நமீபியா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற நமீபியா அணி முதலில் துடுப்பாடியது.
மைக்கேல் வான் லிங்கன் 20 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து வெளியேறினர். மூன்றாவது இடத்தில் களமிறங்கிய லோஃபிடி ஈட்டன் சரவெடியாய் வெடித்தார்.
மறுமுனையில் மலன் க்ரூகர் அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. மலன் அரைசதம் விளாச, ஈட்டன் 33 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.
AN INNINGS TO REMEMBER ??
— Official Cricket Namibia (@CricketNamibia1) February 27, 2024
Nicol Loftie-Eaton reaching his century & breaking the world record for Fastest T20I century? 101(36) #RichelieuEagles #ixu #itstorga #triodata #Airlink #Radiowave #Freshfm #NOVA #EaglesPride pic.twitter.com/SxFnZe5du1
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த என்ற குஷால் மல்லாவின் (34) சாதனையை அவர் முறியடித்தார். அவர் 36 பந்துகளில் 8 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் எடுத்தார். மலன் 48 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுக்க நமீபியா அணி 206 ஓட்டங்கள் குவித்தது.
அதன் பின்னர் களமிறங்கிய நேபாளம் அணி, 18.5 ஓவரில் 186 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக திபேந்திர சிங் 48 (32) ஓட்டங்களும், ரோஹித் பாடீல் 42 (24) ஓட்டங்களும் எடுத்தனர்.
நமீபியா அணியின் தரப்பில் ரூபென் ட்ரம்பெல்மன் 4 விக்கெட்டுகளும், பெர்னார்ட் ஸ்சோல்ட்ஸ், ஜேன் பிரிலின்க் மற்றும் ஈட்டன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
டி20யில் அதிவேக சதம் விளாசிய வீரர்கள்
- ஜேன் நிக்கோல் லோஃபிடி ஈட்டன் (நமீபியா) - 33 பந்துகள்
- குஷால் மல்லா (நேபாளம்) - 34 பந்துகள்
- டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா) - 35 பந்துகள்
- ரோகித் சர்மா (இந்தியா) - 35 பந்துகள்
- சுதேஷ் விக்ரமசேகரா (செக் குடியரசு) - 35 பந்துகள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |