சிக்ஸர்களை பறக்கவிட்டு 133 ஓட்டங்கள் விளாசிய வீரர்!
நேபாள அணிக்கு எதிரான போட்டியில் நமீபியா அணி வீரர் மைக்கேல் வான் லிங்கன் 133 ஓட்டங்கள் விளாசினார்.
மைக்கேல் வான் லிங்கன்
ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை லீக்கில் நேபாளம், நமீபியா, ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அணிகள் விளையாடுகின்றன.
இன்று தொடங்கிய முதல் போட்டியில் நமீபியா மற்றும் நேபாளம் அணிகள் விளையாடி வருகின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நேபாளம் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
நமீபியா 285
அதன்படி களமிறங்கிய நமீபியா அணி 50 ஓவரில் 285 ஓட்டங்கள் எடுத்தது. சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்ட மைக்கேல் வான் லிங்கன் 133 ஓட்டங்கள் குவித்தார். அவரது சதத்தில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும்.
@ICC
25 வயதாகும் மைக்கேல் வான் லிங்கன் 19 ஒருநாள் போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்துள்ளார். கேப்டன் எராஸ்மஸ் 56 ஓட்டங்களும், கிரீன் 34 ஓட்டங்களும் எடுத்தனர்.
நேபாளம் தரப்பில் கரண் 5 விக்கெட்டுகளையும், லாமிச்சேன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நேபாளம் அணி, 25 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
@ICC