இந்தியாவின் செல்வாக்கு மிக்க பெண் தொழில்முனைவோர்: நமீதா தாபரின் ஆடம்பர வாழ்க்கை!
இந்தியாவின் முன்னணி பெண் தொழில்முனைவோர்களில் ஒருவர் தான் நமீதா தாபர்.
வணிகத் திறமை, ஷார்க் டேங்க் இந்தியா முதலீடு, ஆடம்பர வாழ்க்கை என பன்முகத் தன்மையின் அடையாளமாக நமீதா தாபர் விளங்குகிறார்.
அத்துடன் நமீதா தாபர், எம்க்யூர் பார்மாசூட்டிகல்ஸ்( Emcure Pharmaceuticals) நிர்வாக இயக்குனர், ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியின் முக்கிய முதலீட்டாளர், தொழில்முனைவோர் அகாடமி நிறுவனர் என பல அடையாளங்களுடன் வெற்றிகரமாக வலம் வருகிறார்.
கல்வி மற்றும் தொழில் பயணம்
தொழிலதிபர் சதீஷ் ராமன்லால் மேத்தாவின் மகளான நமீதா தாபர். டியூக் பல்கலைக்கழகத்தின் ஃபூகுவா வணிகவியல் பள்ளியில் 2001 ஆம் ஆண்டு MBA பட்டம் பெற்றவர்.
இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தில் (ICAI) தகுதி பெற்ற பட்டய கணக்காளர் மற்றும் அமெரிக்காவில் கைடன்ட் கார்ப்பரேஷனில் வணிக நிதித் தலைவராக பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளார்.
எம்க்யூர் பார்மாசூட்டிகல்ஸில் CFO ஆக இணைந்து, பின்னர் நிர்வாக இயக்குனராக உயர்ந்தார்.
ஷார்க் டேங்க் இந்தியா மற்றும் முதலீடுகள்
ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியில் மூன்று சீசன்களாக முக்கிய முதலீட்டாளராக நமீதா தாபர் பங்கேற்று வருகிறார்.
கிட்டத்தட்ட 25 நிறுவனங்களில் சுமார் 10 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
அத்துடன் பம்மர் (ஆடை பிராண்ட்), அல்டோர் (ஸ்மார்ட் ஹெல்மெட்), இன்ஏகேன் (காக்டெய்ல்), வக்காவோ ஃபுட்ஸ் (உணவு தயாரிப்பு) ஆகியவற்றிலும் முக்கிய முதலீடுகள் செய்துள்ளார்.
சொத்து மதிப்பு மற்றும் வாழ்க்கை முறை
நமீதா தாபரின் நிகர சொத்து மதிப்பு சுமார் 600 கோடி ரூபாய் (எம்க்யூர் பார்மாசூட்டிகல்ஸ் முக்கிய பங்கு) ஆகும்.
புனேவில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர வீடு, MW X7 (2 கோடி ரூபாய்), மெர்சிடிஸ் பென்ஸ் GLE, ஆடி Q7 ஆகிய ஆடம்பர கார்களுக்கும் சொந்தக்காரராக விளங்குகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |